இந்தியன்-2 விபத்து; கமல், சங்கர் இருவருக்கும் போலீசார் சம்மன்?

இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பாக நடிகர் கமல், இயக்குநர் சங்கர் ஆகியோருக்கும் சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது, அதை தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைக்கா நிறுவனம், கிரேன் உரிமையாளர், புரொடக்‌ஷன் மேனேஜர் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியன்-2 படத்தின் இணை இயக்குநர் குமார், லைக்கா நிறுவனம் மீது புகார் அளித்துள்ளார். அதில், லைக்கா நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை, கிரேன் ஆப்ரேட்டர் அஜாக்கிரதையாக இருந்ததாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் கமல் இயக்குநர் சங்கர் ஆகியோருக்கும் சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

What do you think?

வேளாண் பாதுகாப்பு மண்டலம்: விளக்கம் கேட்கும் வைகோ

நியூசியுடன் முதல் டெஸ்ட்; தடுமாறிய இந்தியா – காப்பாற்றி விடுமா மழை?