பீகார் பால விபத்தில் மறைந்த காவலர்..! 10 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு..!!
பீகார் மாநிலம் பஹல்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கை ஆற்றின் அருகே அகுவானி பகத் பகுதியை இணைக்கும் வகையில் 4 வலி பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளது. இந்த பால பணி நடைபெற்று வருவதால் அந்த பகுதி வழியே செல்லும் போக்குவரத்துக்கள் மாற்றி விடப்பட்டுள்ளன.
இருப்பினும் அந்த பாலம் வழியே வேறு யாரும் சென்று விடக்கூடாது என்பதற்காக, பாலத்தை பாதுகாக்கும் பணிக்காக ஒருவர் இருந்துள்ளார்.
கடந்த ஜூன் 4ம் தேதி காலை 6 மணியளவில் திடீரென பாலம் இடிந்து விழுந்துள்ளது. அப்பொழுது அதில் வேலை பார்த்துக்கொண்டிருந்த விபாஷாகுமார் என்ற காவலாளி பால விபத்தில் சிக்கி கொண்டுள்ளார். அடியில் அதிக ஆழத்தில் தண்ணீர் இருப்பதால்.
அப்பகுதியை சுற்றி இருந்த மக்களால் உடனே தண்ணீரில் குதித்து காப்பற்ற முடியவில்லை. பின் விபாஷாகுமார் வீட்டினர் காவல் நிலையத்தில் அளித்த மனுவின் பெயரில் தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வந்துள்ளது.
தீவிர மீட்புக்கு பிறகே அவரை சடலமாக இன்று காலை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.