“அரசியல் மாற்றம் பெரும் கனவு..” விஜய்க்கு, சீமான் வாழ்த்து..!!
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய நாளில் இருந்து பல்வேறு நெருக்கடிகள் அக்கட்சிக்கு வந்து கொண்டிருக்கிறது என சொல்லலாம்..
கட்சிக்கொடி, கட்சி பூ, மற்றும் பாடல் என ஓவ்வொன்றிற்கும் ஒரு சில கட்சிகள் நெருக்கடி கொடுத்து கொண்டே வருகிறது..
அப்படியாக அந்த வகையில் நாம் தமிழர் கட்சி மட்டும் ஆதரவு தரும் விதமாக பேசி வருகிறார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்..
இன்று மாலை மாநாடு நடக்கவுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.. வாழ்த்து தெரிவித்துள்ளார்..
அரசியல் மாற்றமெனும் பெருங்கனவோடு ஆருயிர் இளவல் விஜய் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்…!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பேரறிவிப்பு தமிழ்நாட்டு மண்ணுக்கும், மக்களுக்கும் நலன் பயக்கட்டும்..!
தம்பி விஜய் அவர்களின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும்..! என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..