“ஆதாயம் இல்லா அரசியல் பணி..” கத்தாரில் உயிர் இழந்த தமிழர்..! உதவி கரம் நீட்டிய துரைவைகோ..!
பெரியகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சசிகலாவின் கணவர் முருகேசன் நாராயணசாமி கத்தாரில் பணியாற்றி வந்துள்ளார்., கடந்த ஜூன் 24-ம் தேதி அவர் திடீரென உயிரிழந்துள்ளார். அவரது உடலை தமிழகம் கொண்டு வருவதற்கு அந்நிறுவனம் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை.. இந்நிலையில் முருகேசன் குடும்பத்தினர் துரைவைகோவிடம் உதவி கேட்டுள்ளனர்.
தற்போது முருகேசன் உடல் தமிழ்நாடு வந்து சேர்ந்துள்ளது. இதைப்பற்றி மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுவுள்ளார்.
பெரியகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சசிகலா முருகேசன் அவர்களின் கணவர் முருகேசன் நாராயணசாமி உடல் தமிழகம் வந்து சேர்ந்தது..
திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கந்தர்வக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெரியகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சசிகலா முருகேசன் அவர்களின் கணவர் முருகேசன் நாராயணசாமி கத்தார் நாட்டில் கடந்த ஜூன் 24-ம் தேதி இரவு மறைந்தார்.
அவரது உடலை இந்தியாவிற்கு அனுப்ப போதிய ஒத்துழைப்பை முருகேசன் பணிபுரிந்த நிறுவனம் தராததால் முருகேசனின் மனைவி சசிகலா அவர்கள் நமது கழகத்தின் ஒன்றியச் செயலாளர் சகோதரர் வைரமூர்த்தியிடம் தெரிவித்து முருகேசன் அவர்களின் உடலை பெற்று தரும்படி உதவி கேட்டுள்ளார்.
இந்தத் தகவலை புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் அண்ணன் எஸ்.கே.கலியமூர்த்தி அவர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர் கடந்த 27ஆம் தேதி காலை இதுபற்றி என்னிடம் தெரிவித்தார். இந்தத் தகவலை உடனே கத்தாரில் இருக்கும் கழக இணையதள ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேஷ் அவர்களை தொடர்பு கொண்டு முருகேசன் அவர்களின் உடலை விரைவாக இந்திய கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
கத்தார் அரசாங்கத்தின் ஒப்புதல் பெற்று பின்பு கத்தாரில் இருக்கும் இந்திய தூதரகத்தின் ஒப்புதலை பெற்று இரண்டு நாட்களுக்குள் அனைத்து அரசாங்க வேலைகளையும் முடித்து முருகேசனின் உடல் இன்று காலை 9.30 மணிக்கு (30-07-2024) சென்னை வந்தடைந்தது. முருகேசன் அவர்களின் உடலை கொண்டு வர அவரது நிறுவனம் போதிய ஒத்துழைப்பை தராததால் முழு செலவையும் ஏற்று முருகேசன் அவர்களின் உடலை இந்தியா கொண்டு வர பெரும் உதவியாய் இருந்த தொழில் அதிபர் திரு.சையத் யாசிர் நைனார் அவர்களுக்கும், கத்தார் தமிழ் சங்கத்தின் செயலாளர் திரு.மணி பாரதி அவர்களுக்கும், நமது கழக இணையதள அணி ஒருங்கினைப்பாளர் மினர்வா ராஜேஷ் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
மேலும், குவைத் நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான சமூக ஆர்வலர் திரு.மதி அவர்களின் உதவியால் சென்னையில் இருந்து முருகேசன் அவர்களின் சொந்த ஊருக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அதற்காக, சமூக ஆர்வலர் திரு.மதி அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேப்போல, குவைத் நாட்டில் இறந்த சகோதரர் ஒருவரின் உடலை சொந்த ஊரான திருச்சிக்கும், இலங்கையில் இறந்த சகோதரர் ஒருவரின் உடலை கொண்டுவர அந்நாட்டு மதிப்பில் 8 இலட்சம் ரூபாய் கேட்ட நிலையில் சொந்த ஊரான தஞ்சைக்கும் கொண்டுவர முயற்சி எடுத்து அவர்களின் உடல்களும் சொந்த ஊர்களுக்கு வந்து சேர்ந்தன. மறைந்த முருகேசன் அவர்களோடு சேர்த்து இந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று தமிழர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வந்துள்ளேன்.
“சக மனிதனின் கண்ணீரை துடைக்கின்ற இந்தப் பணிகளை உணர்வுப் பூர்வமாகவும், அவர்களின் துயர நிலையை உணர்ந்தும் விரைவான முயற்சிகள் எடுத்து செய்து முடித்தேன்.”
“ஆதாயம் இல்லா அரசியல் பணி. சமரசம் இல்லா மக்கள் நலன்.” என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..