பொங்கல் பரிசு தொகையை குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த இயலுமா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது அதற்கு தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தொகுப்புகளுடன் பரிசு தொகை வழங்குவது இயல்பானது. இந்த முதலில் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படாமல் இருந்தது பின்னர் பலரின் வலியுறுத்தலின் படி பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் வீடு தேடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை, பொங்கல் பரிசு தொகையை குடும்ப அட்டைதாரர்களின் வாங்கி கணக்கில் செலுத்த முடியாத என்றும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணியை போல் இதனை செய்ய முடியதா என்று கேள்வி எழுப்பியது.
அதற்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது, பொங்கல் நெருங்கிவிட்டதாலும் மற்றும் குறுகிய காலமே இருப்பதாலும் வாங்கி கணக்கில் பணத்தை செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு தமிழ்நாடு அரசு விளக்கமளித்து.