இறந்த தாய் உயிர்தெழ சடலத்தின் மீது பூஜை… தோல்வியில் முடித்த முயற்சி..! விரக்தியில் மகன் செய்த விபரீத முடிவு..!
பெரம்பலூர் மாவட்டம், ரோவர் ஆர்ச் சாலை, முத்து நகரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில், காரைக்குடியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் என்பவர் தனது தாயுடன் கடந்த ஒரு ஆண்டு காலமாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் முத்து நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் வந்த போலீசார் தகவல் வந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த அதிர்ச்சி அடைந்தனர். அங்கு அழுகிய நிலையில் 70 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டியும் சடலமும், 35 வயது நபர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இரண்டு சடலங்கள் இருந்தன.
மேலும் இறந்த நிலையில் கிடந்த மூதாட்டியின் சடலத்தின் மேல் மஞ்சள், குங்குமம், பத்தி, எலுமிச்சை பழம், தர்ப்பைப்புல், ஆரஞ்சு பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள், கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், இறந்த தாய் உயிர்த்தெழுவார் என சடலத்திற்கு அவர் பூஜை செய்து அது தோல்வியில் முடிந்ததால் மனம் உடைந்து மகனும் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு நபர்கள் இறந்த உடலை வைத்து பூஜை நடத்தினார்களா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்