தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமாகி, தமிழில் திரையுலகில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என வலம் வந்த பழம்பெரும் நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவால் காலமானார்.
திரையுலகிற்கு இந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே அமைந்துள்ளது. திரையுலகைச் சேர்ந்த காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர்கள் உடல் நலக்குறைவால் அடுத்தடுத்து மரணமடைந்து வருகின்றனர். சமீபத்தில் பிரபல காமெடி மனோபாலா காலமான நிலையில், தற்போது நடிகர் சரத்பாபு மரணமடைந்தது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த சரத்பாபு, முதலில் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், உயர் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் வேறு சில உடல்நலக் கோளாறுகள் காரணமாக இன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, இன்று சரத்பாபு மருத்துவமனையில் உயிரிழந்தார்.