ஆரோக்கியமான சில காலை உணவுகள்..!
நம் உடலுக்கு காலை உணவு என்பது மிகவும் முக்கியமானவை. எனவே காலை உணவை ஆரோக்கியமாக எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு நல்லது.
அந்த வரிசையில் சில ஆரோக்கியமான காலை உணவு வகைகளை பற்றி பார்ப்போம்.
ஆரோக்கியமான காலை உணவுகள்:
- ஆவியில் வேகவைத்த புட்டு, இடியாப்பம், இட்லி ஆகியவற்றை காலை உணவாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
- சிறுதானியங்களான கம்பு, வரகு, கேழ்வரகு ஆகியவற்றால் செய்த கூழ் குடிப்பது காலை உணவிற்கு சிறந்தது.
- பட்டாணி, சுண்டல் மற்றும் பயிறு வகைகளை காலை உணவாக சாப்பிடுவது சிறந்தது.
- பல சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களையும் காலை உணவாக சாப்பிடலாம்.
- உங்களுக்கு பிடித்த காய்கறிகள் மற்றும் பழங்களை நறுக்கி சாலட் செய்தும் காலை உணவாக சாப்பிடலாம்.
- உலர்ந்த பழங்களை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் அதனை அரைத்தும் குடிக்கலாம்.
- சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்களை கொண்டு உப்புமா செய்தும் சாப்பிடலாம்.