தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரையில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி நேற்று ஆழந்த காற்றழுத்த தாளவு பகுதியாக வலுப்பெற்றது. இந்நிலையில், அந்த ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் டிசம்பர் 25ம் தேதி, தென் கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் டிசம்பர் 25ம் தேதி பலத்த சூறை காற்று வீசும் என்பதனால், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளனர்.