நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு..! ஒன்றிய கல்வி அமைச்சருக்கு காங்கிரஸ் கண்டனம்..!
நீட் மாணவர் சேர்க்கை முறை நாளுக்கு நாள் மிக மோசமடைந்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இந்தியா முழுவதும் நடப்பு கல்வியாண்டிற்கான மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றதை. தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதனையடுத்து வெளியான நீட் தேர்வு முடிவில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக சில தகவல்கள் வெளியானது. அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக பலரும் உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தனர் உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏற்கனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது..
சுமார் 26 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியானது. அதனை அடுத்து மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக அவர் கூறியதாவது, ஒட்டுமொத்த நீட் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறையே நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே வருகிறது. கலந்தாய்வு ஒத்திவைப்பு மூலம் மாணவர்களின் எதிர்காலமே தற்போது கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது.
பிரதமர், ஒன்றிய கல்வி அமைச்சரின் திறமையின்மை, பொறுப்பின்மை கலந்தாய்வு ஒத்திவைப்பு மூலம் அம்பலமாகிவிட்டது என ஜெயராம் ரமேஷ் குற்றச்சாட்டியுள்ளார். நீட் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை நாளை மறுநாள் (ஜூலை 8-ம் தேதி ) நடைபெறவுள்ள நிலையில் கலந்தாய்வு தேதி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..