நாடுமுழுவதும் நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைப்பு..! தேசிய மருத்துவ ஆணையம் அறிக்கை..!!
மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இறுதி ஆண்டில் நெக்ஸ்ட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே பயிற்சி மருத்துவராக பணியாற்ற முடியும் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள், அடுத்த ஆண்டு முதல் இந்த தேர்வை எழுத வேண்டியது கட்டாயம் எனவும் அறிவித்திருந்தது.
நெக்ஸ்ட் தேர்வால் மாணவர்களுக்கு சுமை தான் அதிகரிக்கும். என மருத்துவர்கள் சங்கமும் , மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், மேலும் , மத்திய சுகாதார அமைச்சகத்தின் வேண்டு கோளை ஏற்ற தேசிய மருத்துவ தேர்தல் ஆணையம், நெக்ஸ்ட் தேர்வை காலவரையின்றி ஒத்திவைக்கப் போகிறது என, தேசிய மருத்துவ ஆணையம் அறிக்கை விடுத்துள்ளது.
மருத்துவப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் மேலும் பல தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டி இருப்பதால் நெக்ஸ்ட் தேர்வு தள்ளி வைக்கப் படுவதாக கூறப்பட்டுள்ளது.
மருத்துவர் ஆவதற்கு முன் நீட் தேர்வு.., மருத்துவ படிப்பு படித்து கொண்டிருக்கும் பொழுது சில தேர்வுகள் மற்றும் பல ஆராய்ச்சிகள் என அனைத்தையும் செய்ய வேண்டி இருக்கும்.., மருத்துவ படைப்பை முடிக்கும் பொழுது நெக்ஸ்ட் தேர்வு என்பது அவர்களின் மன வலியை அதிகரிக்கும். காரணம் ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட அவர்கள் இத்தனை ஆண்டு படித்த அனைத்து கஷ்டங்கள்.., பலன் இல்லாமல் போய் விடும்.
எனவே அவர்களின் மன வலியை குறைத்து தேர்வில் முழு கவனம் செலுத்தி அவர்கள் மருத்துவராக மாணாவர்களுக்கு கால அவகாசம் வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன் வைத்த கோரிக்கையை ஏற்று, தேசிய மருத்துவ ஆணையம் நெக்ஸ்ட் தேர்வை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளது.
மீண்டும் தேர்வு எப்பொழுது நடைபெறும் என்று.., தேதி பின்னர் அறிவிக்கப் படும் என்றும். தேசிய மருத்துவ ஆணையம் கூறியுள்ளது.