ADVERTISEMENT
உடலுக்கு வலுவூட்டும் உளுத்தங்களி…
உளுந்தங்களி நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை தருகிறது. புரதம், கொழுப்பு, வைட்டமின் B மற்றும் கார்போஹைடிரேட் சத்துகள் உளுந்தில் அதிகம் காணப்படுகிறது.
அதிலும் பெண்களுக்கு மிகவும் தேவையான இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் அடங்கிருப்பதால் உளுத்தங்களி உண்பது இடுப்பு எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது. உளுந்தில் இருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. நரம்பு மண்டலத்திற்கு வலிமை தருகிறது.
தேவையான பொருட்கள்:
-
அரைத்த உளுந்து மாவு – 4 கை அளவு
-
கருப்பட்டி அல்லது வெல்லம் – சுவைக்கு ஏற்ப
-
தேங்காய் துருவியது – 3 ஸ்பூன்
-
நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்
-
அரிசி மாவு – 4 ஸ்பூன்
-
ஏலக்காய் பொடி – சிறிதுதளவு
செய்முறை:
-
உளுந்து, அரிசி, வெந்தயம் ஆகியவற்றை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
-
3 மணி நேரம் கழித்து ஊறவைத்த உளுந்து, அரிசி, வெந்தயம் ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
-
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக இடைவெளி விடாமல் கிண்டவும். பின் களி பதம் வந்ததும் இறக்கவும்.
-
கருப்பட்டி பாகு காய்ச்ச கருப்பட்டியை தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்…. ஏலக்காய் மற்றும் சுக்கு பொடி சிறிது சேர்க்கவும்.
-
களியை தட்டில் வைத்து அதில் கருப்பட்டி பாகு சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு சாப்பிடவும்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.