ADVERTISEMENT
நகம் நீளமாகவும் அழகாகவும் வளர இதை ட்ரைப் பண்ணுங்க..!
தேங்காய் எண்ணெய்:
முதலில் ஒரு சின்னக் கிண்ணத்தில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் கொஞ்சம் தேன் மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இந்தக் கலவையை மிதமாக சூடு செய்து கொள்ளுங்கள். பிறகு இந்த எண்ணெய் பயன்படுத்தி நகங்களுக்கு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
இதனை அன்றாடம் செய்து வந்தால் நகங்கள் நல்லா நீளமாக வளரும்.
ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாறு:
ஒரு சின்னக் கிண்ணத்தில் 3 ஸ்பூன் அளவு ஆலிவ் எண்ணெய் ஊற்றி அதனுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்துக் கொள்ளுங்கள்.
அந்த கலவையில் சில நிமிடங்கள் நகங்களை ஊறவிடுங்கள், இப்படி வாரம் 2 முறை செய்யலாம்.
முட்டை ஓடு மற்றும் ஆளி விதை:
தேவையான அளவு முட்டை ஓடு, ஆளி விதை மற்றும் பாதாம் பருப்பு ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இதனை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொள்ளலாம்.
தேவையான அளவு பொடியை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் கொஞ்சம் வெதுவெதுபான பால் சேர்த்து நன்றாக கலந்து அந்த கலவையை நகங்களின் மீது தடவி ஊற வைத்து பின் கழுவி விடவும்.
இப்படி தொடர்ந்து செய்து வந்தால் விரல் நகங்கள் நன்றாக நீளமாகவும் வலிமையாகவும் வளரும்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.