சத்தான வெஜிடெபிள் நூடல்ஸ் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் சமைக்க:
தண்ணீர்
உப்பு
நூடுல்ஸ் – 200 கிராம்
எண்ணெய்
வெஜிடபுள் நூடுல்ஸ் செய்ய:
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பூண்டு
இஞ்சி
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1
கேரட்
பீன்ஸ்
முட்டைக்கோஸ்
சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் குடைமிளகாய்
வெங்காயத்தாள்
உப்பு
மிளகு – 1 தேக்கரண்டி
சில்லி சாஸ் – 2 தேக்கரண்டி
வினிகர் – 2 தேக்கரண்டி.
மிளகாய் சாஸ் – 3 தேக்கரண்டி
வேகவைத்த நூடுல்ஸ்
கொத்தமல்லி இலை
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் நூடல்ஸ் சேர்த்து வேகவைக்கவும்.
பின் அதனை வடிகட்டி நூடல்ஸை ஆறவைக்கவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியப்பின் அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ்,பச்சை,மஞ்சள் மற்றும் சிவப்பு குடைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயத்தாள்,உப்பு,மிளகுத்தூள்,சோயா சாஸ்,வினிகர்,சில்லி சாஸ் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
அதில் வேகவைத்த நூடல்ஸ் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
சத்தான வெஜிடெபிள் நூடல்ஸ் தயார்.