செட்டிநாடு ஸ்டைல் பசலைக்கீரை கூட்டு..!
பாசி பருப்பு அரை கப்
தண்ணீர்
மஞ்சள் தூள் 1 சிட்டிகை
பசலைக் கீரை 1 கட்டு
சின்ன வெங்காயம் 10 நறுக்கியது
பச்சை மிளகாய் 3 கீறியது
உப்பு தேவையானது
நெய் 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன்
பூண்டு 2 பல்
காய்ந்த மிளகாய் 2
பெருங்காயம் கால் ஸ்பூன்
ஒரு குக்கரில் பாசிப்பருப்பு , மஞ்சள் தூள், கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேக விடவும்.
கீரையை சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,பூண்டு,மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் பசலை கீரையை சேர்த்து வதக்கவும். பின் வேகவைத்த பருப்பை சேர்த்து உப்பு போட்டு வேகவைக்கவும்.
தாளிக்க நெய்,உளுந்து,கடுகு,பூண்டு,காய்ந்த மிளகாய், பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கூட்டின் சேர்த்து கலந்து விடவும்.