ஈவினிங் ஸ்நாக் சில்லி சிக்கன் ஃப்ராங்கி…!
பச்சை மிளகாய் 5 நறுக்கியது
பூண்டு 8 பற்கள்
இஞ்சி 1 துண்டு
வெங்காயம் அரை நறுக்கியது
சிக்கன் 300 கிராம்
எலுமிச்சை சாறு அரை பழம்
அரைத்த மசாலா விழுது 1 ஸ்பூன்
தயிர் கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் அரை ஸ்பூன்
தனியா அரை ஸ்பூன்
சீரகத்தூள் கால் ஸ்பூன்
கரம் மசாலா அரை ஸ்பூன்
சாட் மசாலா அரை ஸ்பூன்
உப்பு தேவையானது
கொத்தமல்லி இலை நறுக்கியது
எண்ணெய் தேவையானது
வறுத்த சில்லி சிக்கன் துண்டு
சப்பாத்தி
புதினா சட்னி
வெங்காயம் 1 நறுக்கியது
குடைமிளகாய் 1 நறுக்கியது
கேரட் 1 நறுக்கியது
மயோனஸ்
மிக்ஸில் இஞ்சி,பூண்டு,மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
சிக்கனை நீளவாக்கில் நறுக்கி அதில் எலுமிச்சை பழச்சாறு, மசாலா விழுது,தயிர்,மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,தனியா தூள்,கரம் மசாலா, உப்பு,சீரகத்தூள், சாட் மசாலா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து 30 நிமிடங்களுக்கு ஊறவிட வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்துக் கொள்ள வேண்டும்.
பின் தயாராக உள்ள சப்பாத்தியில் புதினா சட்னி, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கேரட், காரமான மயோனஸ் மற்றும் பொரித்த சிக்கனை வைத்து ரோல் செய்ய வேண்டும்.
அவ்வளவுதான் சில்லி சிக்கன் ஃப்ராங்கி தயார்.