கேரளா புட்டு ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
புட்டு மாவு இரண்டு கப்
உப்பு தேவையானது
துருவிய தேங்காய் ஒரு கப்
தண்ணீர் தேவையானது
செய்முறை:
முதலில் தயாரித்த புட்டு மாவை லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வறுத்த மாவை எடுத்துக் கொண்டு அதில் உப்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
தண்ணீரை இந்த மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
மாவை நன்றாக பிசைந்து உதிரி உதிரியாக இருக்கும் அளவிற்கு பிசைந்துக் கொள்ளவும்.
பின் புட்டு குழாயில் இரண்டு ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.
அதன் மேலே பிசைந்த மாவில் 4 ஸ்பூன் சேர்த்து கொள்ள வேண்டும்.
இதுபோல புட்டு குழாய் நிரம்பும் வரை தேங்காய் மற்றும் புட்டு மாவை மாற்றி மாற்றி வைக்கவும்.
பின் புட்டு குழாயை மூடி தயாராக வைக்கவும்.
குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி குக்கரி மூடி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
குக்கரில் விசில் போடும் இடத்தில் புட்டு குழாயை வைத்து வேகவைக்க வேண்டும்.
குக்கரில் வரும் ஆவியில் இப்போ புட்வை வேக வைக்கிறோம்.
புட்டு குழாயில் ஆவி வந்ததும் புட்டு வெந்துவிட்டது என்று அர்த்தம்.
ஒரு தட்டில் புட்டு குழாயை சாய்த்தவாறு கீழே கொட்டவும்.
அவ்வளவுதான் கேரளா புட்டு தயார்.
இதற்கு தொட்டு சாப்பிட கடலை கறி வைத்து சாப்பிடலாம்.