இன்னிக்கு நைட் வித்தியாசமான தோசை செய்ங்க..!
கோதுமை மாவு – 1 கப்
வாழைப்பழம் – 2
பொடித்த வெல்லம் – 100 கிராம்
உப்பு – சிட்டிகை
நெய் – தேவையான அளவு
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
பொடியாக நறுக்கிய பழங்கள் – 50 கிராம்
வெல்லத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
வாழைப்பழத்தையும் நன்றாக பிசைந்துக் கொள்ளவும் அத்துடன் கோதுமை மாவு, உப்பு, கரைத்து வைத்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நல்லா கெட்டியான மாவு பதத்திற்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் மாவை நன்றாக கரண்டியால் அடித்து கலக்கிக் கொள்ளவும்.
தோசைக்கல்லில் மாவை ஊற்றி தோசை போல் தேய்க்கவும், அதன்மேல் உலர்பழங்களை தூவி நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
