அருணாசலேசுவரர் பிரதோஷ அபிஷேகம்.!! சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுக்கும் நந்தி பகவான்..!!
பிரதோஷத்தை முன்னிட்டு அருள்மிகு அருணாசலேசுவரர் கோயிலில் பெரிய நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேக மகா தீபாராதனை.
பிரசித்தி பெற்ற பஞ்சபூதத் ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலின் ஐந்தாம்பிரகாரத்திலுள்ள பெரிய நந்திபகவானுக்குசிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்துமஹா தீபாராதனை நடைபெற்றது,
பெரிய நந்திபகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு அரிசி மாவு, மஞ்சள் தூள், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்புசாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு விதமான வண்ண மலர்களால் பூ மாலை அலங்காரம் செய்து சிவாச்சாரியார்கள்வேதமந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பெரிய நந்திபகவானுக்கு பல்வேறு அபிஷேகப்பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து பூ மாலை அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நந்திபகவானை வழிபட்டனர்.
நாளை ஆவணி பெளர்ணமி என்பதாலும் இன்று விடுமுறை நாள் என்பதாலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று முதல் பகதர்கள் கூட்டம் அதிகரித்துவிட்டது என சொல்லலாம்.., ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்வது வழக்கம் அந்த வகையில் நாளை பெளர்ணமி என்பதால் பக்தர்கள் கிரிவலம் செல்லும் பாதையில் தூய்மை பணியில் நடைபெற்று வருகிறது.
மேலும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது., பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக இருக்கும் வகையில் பல்வேறு சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..