உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து, வங்கதேசம் வழியாக அசாமின் திப்ரூகர் வரை செல்லம் உலகின் மிக நீண்டதூரம் பயணிக்கும் சொகுசு கப்பல் சேவையை, டில்லியில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
எம்.வி.கங்கா விலாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த சொகுசு கப்பல் இரண்டு நாடுகளில் 27 நதிகள் வழியாக 52 நாட்களில் 3 ஆயிரத்து 200 கி.மீ பயணிக்கும் என்றும், சுமார் 68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிட்டத்தட்ட நடமாடும் ஐந்து நட்சத்திர ஹோட்டலாக கருதப்படும் இக்கப்பலில் ஒரு நேரத்தில் 36 பயணிகள் வரை பயணிக்கலாம் என கூறப்படுகிறது. இதையடித்து, வாரணாசியின் கங்கை நதிக்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள, ‛டென்ட் சிட்டி’ என்ற இடத்தையும் பிரதமர் துவக்கி வைத்தார்.