மகா கும்பமேளா திரிவேணியில் புனித நீராடினார் பிரதமர் மோடி..!!
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-தேதி தொடங்கியது. தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் இதுவரையில் 34.97 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
இதில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்பது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேலாவில் 35 கோடி பக்தர்கள், துறவிகள், அகாராக்கள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பிற்காக 1 லட்சத்து 50 ஆயிரம் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு இரயில் சேவை மற்றும் விமான சேவைகள் இயக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 29ம் தேதி தை அமாவாசை தினத்தையொட்டி பிரயாக்ராஜில் அமிர்த ஸ்நானம் நடைபெற்றது இதில் 10கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றதால் கூட்ட நெரிசலில் சிக்கி 31பேர் உயிர் இழந்துள்ள நிலையில் 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் உயிர் இழந்தோர் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிவரண தொகையை அரசு அறிவித்திருந்தது..
https://twitter.com/i/status/1887016903555867123
இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு பிரதமர் மோடி வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட்டார். இந்நிகழ்வின் போது துறவிகளும் உடன் இருந்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..