பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பிளான்..!
திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக வான்வழி பயணம் மேற்கொள்ளும் பிரதமர், கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் வந்து இறங்குகிறார்.
அங்கிருந்து கார் மூலம் அருகில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, பின்னர் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குத் தனி படகு மூலம் செல்கிறார்.
மேலும், இரவில் அங்கு தங்கும் பிரதமர், நாளை அதிகாலையில் இருந்து தியானம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமரின் வருகை முன்னிட்டு, வான்வழி பயணமான ஹெலிகாப்டர் பாதுகாப்பு ஒத்திகை மற்றும் தரை வழியாக அவர் செல்லும் பகுதிகளில் தீவிர சோதனைகளும் நடைபெற்றது.
அதேபோன்று, கடல் வழியில் அவர் பயணிக்கவிருக்கும் படகு மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தைச் சுற்றிலும் உள்ள கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழு, கடற்படை காவல்துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..