கடந்த 5 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டு பயணத்துக்காக மட்டும் இத்தனை கோடி செலவா?

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்காக ரூ.446.52 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது நடைபெறும் நாடாளுமன்றத்தின் மக்களவை கூட்டத்தொடரில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் கூறுகையில், “கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்காக விமான செலவுகள் எல்லாம் சேர்த்து மொத்தம் ரூ.446.52 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

அந்த தகவலின்படி , 2015-16-ம் ஆண்டில் ரூ.121.85 கோடி, 2016-17-ல் ரூ.78.52 கோடி, 2017-18-ம் ஆண்டில் ரூ.99.90 கோடியும், 2018-19-ம் ஆண்டில் ரூ.100.02 கோடியும், 2019-20-ம் ஆண்டில் ரூ.46.23 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.

What do you think?

‘பிஸ்கோத்’-ஆன சந்தானம் – First Look பரபர..!

‘மழையால் அடித்த Luck’ டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய மகளிர் அணி!