அச்சு அசலா ஜெ. போன்றே இருக்கும் கங்கனா…!

இயக்குநர் ஏ.எல். விஜயின் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் தலைவி. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்த படம் தயாராகி வருகின்றது. சில நாட்களுக்கு முன்பு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தில் ஒரு சிறிய காட்சி வெளியானது. எம்.ஜி.ஆர் வேடத்தில் பிரபல நடிகர் அரவிந்த் சாமி அழகாக நடித்திருந்தார். அந்த நொடி முதலே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது என்றால் அது மிகையல்ல

View this post on Instagram

Revealing Kangana's look from the film, #Thalaivi on the occasion of 72nd Birth Anniversary of #Jayalalitha. The film is based on the story of the life of J. Jayalalithaa, and touts to shed light on the lesser known aspects of her life.

A post shared by Kangana Ranaut (@team_kangana_ranaut) on

இந்நிலையில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மற்றும் கங்கனா ராவத் ஆகிய இருவருக்கும் இடையில் பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை என்றும், கண்டிப்பாக கங்கனா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

What do you think?

டிரம்ப் வருகை : பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி 4 கேள்விகள்…!

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பதில் ஊழல்…!துரைமுருகன் குற்றச்சாட்டு