விஜய் டிவி என்றாலே நம் அனைவருக்கும் உடனடியாக நினைவிற்கு வரும் பிரபலங்களில் ஒருவர் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இது தவிர, சூப்பர் சிங்கர், ஓ சொல்றியா ,ஸ்டார்ட் ம்யூசிக் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், பிரியங்கா பிரபல டிஜே வசியை திருமணம் செய்துள்ளார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. தற்போது, வசிக்கு 42 வயதாகிறது. பிரியங்காவுக்கு 32 வயது.
வசி சொந்தமாக ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தையும் நடத்தி கொண்டிருக்கிறார். பிரபல கிளப், டிக்கோதே போன்றவை மட்டுமின்றி பல பெரிய திருமண நிகழ்ச்சிகளுக்கு அவர் டி.ஜே.வாக இருந்திருக்கிறார்.ஒரு நிகழ்ச்சியில் தான் பிரியங்கா மற்றும் வசி இருவரும் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.
பின்னர், காதல் மலர்ந்து, தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது பிரியங்காவின் திருமணத்தில் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் அசார், சுனிதா, அன்ஷிதா, அமீர் பாவ்னி, நிரூப், பிக் பாஸ் மதுமிதா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த பிரியங்கா விஜய் டி.வி.யில் வேலை பார்த்த பிரவீன் என்பவரைக் காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர் , தொடர்ந்து, 2022ம் ஆண்டு விவாகரத்து பெற்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.