திருப்பதியில் தரிசனம் செய்த ராம் சரண்..!! “ஜரகண்டி ஜரகண்டி ” டிரண்டிங்…
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் சரண். இவர் இயக்குநர் சங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கேம் சேஞ்சர் படத்திற்கு இயக்குநர் சங்கர் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் திரைக்கதை எழுதி இருக்கிறார்கள். இதில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மேலும் பல முன்னணி கதாபாத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.
இப்படத்தை தில் ராஜூ தயாரிக்க, தமன் இசையில் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கேம் சேஞ்சர் படத்தின் நாயகன் ராம் சரண் தனது பிறந்தநாளை ஒட்டி தனது குடும்பத்துடன் திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்தார். கேம் சேஞ்சர் படக்குழு “ஜரகண்டி” என்ற பாடலை வெளியிட்டுள்ளது. ஜரகண்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
