நரம்பு புடைக்க தயாராகி வரும் அமரன் படம்..!
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள அமரன் படமானது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வரும் அக்டோபர் மாதம் 31 ம் தேதி தீபாவளிக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இதற்கிடையில் படத்திற்கான முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்தின் டப்பிங்கிள் சிவகார்த்திகேயன் நரம்பு புடைக்க பேசும் வீடியோவை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி வெளியிட்டுள்ளார்.
பிரபல விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துக் கொண்டு பின் அது இது எது நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி பின் விஜய் டிவியின் முன்னனி தொகுப்பாளராக தன்னை நிலைநிறுத்தினார். மேலும் எஸ்.கே அவர்களுக்காகவே நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க பலரும் நிகழ்ச்சிக்கு செல்லும் நிலை இருந்தது.
இப்படி சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் இயக்குநர் பாண்டிராஜ் அவர்களால் வெள்ளித்திரைக்கு கொண்டுவரப்பட்டார். 2012 ஆம் ஆண்டு மெரினா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தனுஷின் 3 படத்தில் ஹீரோவிற்கு நண்பனாக நடித்து இருந்தார்.
தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் அடுத்ததாக சீரியஸாகவும் நடிக்க ஆரம்பித்தார். மேலும் பாடல் பாடுவது, எழுதுவது, படம் தயாரிப்பது போன்றவற்றையும் செய்ய ஆரம்பித்தார். தற்போது சூரி நடிப்பில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி திரைப்படம் வெளியாக உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள அமரன் திரைப்படம் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். அமரன் திரைப்படத்தை ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் மையமாக தமிழ்நாட்டில் வீரமரணம் அடைந்த முகுந்த் வரதராஜரின் வாழ்க்கை சம்பவமும் ட்ரூ ஸ்டோரி ஆஃப் மாடர்ன் மிலிட்டரி என்ற புத்தகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் படத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நரம்பு புடைக்க டப்பிங் பேசும் வீடியோவை இயக்குநர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.