யூடியூப் சேனல்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்…!! இனி அதற்கு மட்டும் தடை…!!
திரை அரங்கிற்குள் பேட்டி எடுக்க மற்றும் திரைப்படங்கள் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் பதிவிடக்கூடாது என யூடியூப் சேனல்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்., படம் வெளியாகும் முதல் நாளில் திரை அரங்கிற்கு வெளியே மக்களிடம் படங்களின் நிறை குறைகளை பற்றி விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் அது திரைப்படத்தை பற்றி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன் மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ஒரு திரைப்படத்தை மூன்று மணி நேர பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்க வேண்டும், அதில் இருக்கும் குறைகளை கருத்துக்களாக கூறாமல் சமுதாயத்திற்கும் அநீதி விளைவித்ததை போல சிலர் பேசும் கருத்துக்கள் அநீதியான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பொது விமர்சனம் என்கிற பெயரில் பார்வையாளர்களை திரைப்படங்கள் மீதும் அதில் சம்பந்தபட்டவர்கள் மீதும் வன்மத்தை கக்கும் மனிதர்களாக மாற்றும் இந்த போக்கை உடனடியாக தடை செய்யவேண்டும் என அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதைபோல் இந்த ஆண்டில் திரையிடப்பட்ட இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா போன்ற படங்களுக்கு பொது விமர்சனம் மூலம் யூடியூப் சேனல்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதகாவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..