மறைந்த பேராசிரியர் மற்றும் முன்னாள் அமைச்சர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி இவ்வையகமும் உயர பேராசிரியர் 101-வது பிறந்த நாளில் உறுதி ஏற்போம் என்று பேசியுள்ளார்.
மறைந்த முன்னாள் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு நாளையொட்டி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கீழ்பாக்கத்திலுள்ள அவரது வீட்டிற்கு சென்று படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை வளாகத்திற்கு க.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டது. பின், பெயர் பலகை மற்றும் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு வளைவை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அந்த விழாவில் பேசிய முதல்வர், எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி இவ்வையகமும் உயர பேராசிரியர் அன்பழகன் 101-வது பிறந்த நாளில் உறுதி ஏற்போம் என்றும் அன்பழகன் திராவிடவியல் கோட்பாட்டுக்கு விளக்கவுரை தீட்டியவர் மட்டுமல்ல, அவர் அதற்கு விளக்காகவும் இருந்தவர். மேலும் பேராசிரியர் அன்பழகன் மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுத்தவர் என்று அவரது நூற்றாண்டு விழாவில் பேசினார்.