ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு வர தடை – டிரம்ப் அதிரடி!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு வர தடைவிதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியுள்ளது. 124 நாடுகளில் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸால் தற்போது வரை உலகளவில் 4, 657 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவையும் இந்த கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 29 பேர்பலியாகியுள்ளனர், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வண்ணம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,
“ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா வருவதற்தான அனைத்து பயணங்களையும் 30 நாட்களுக்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாகவும், மேலும் இந்த பயணத் தடை வெள்ளிக்கிழமை இரவு முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஆனால் இங்கிலாந்துக்கு இந்த தடை பொருந்தாது என்றும் இந்த நடவடிக்கை மேலும் வைரஸ் பரவாமல் தடுக்கும்” என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

What do you think?

‘தமிழக மக்கள் கேரளாவுக்கு செல்லவேண்டாம்’ அமைச்சர் எச்சரிக்கை!

‘ரஜினியின் அரசியல் முடிவு’ சீமான் வரவேற்பு!