சார்பதிவாளர் அலுவலகங்களுக்குள் எழுத்தர்களும் நிலத்தரகர்களும் நுழைய தடை

போலிப் பத்திரப் பதிவுகளை தடுக்க மார்ச் ஒன்றாம் தேதி முதல் சார்பதிவாளர் அலுவலகங்களுக்குள் பத்திர எழுத்தர்களும், நிலத்தரகர்களும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பத்திரப் பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பத்திர எழுத்தர்கள் பத்திரங்கள் தயாரிப்பதற்கான கட்டண ரசீதை பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமென கூறியுள்ளார். கட்டண ரசீதுடன் பத்திரம் தாக்கல் செய்யப்படுவதை பதிவு அலுவலர்கள் உறுதிசெய்த பின்பே, பத்திர பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பத்திர எழுத்தர்கள் பொதுமக்களுக்கு கொடுக்கும் அந்த கட்டண ரசீதின் நகலை, பதிவு அலுவலர்கள் அந்தந்த பத்திரங்களுடன் சேர்ந்து அலுவலக கோப்பில் வைத்து பராமரிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். பத்திர எழுத்தர்களும் நிலத்தரகர்களும் சார்பதிவாளர் அலுவலகங்களில் நுழையக் கூடாது என்ற நெறிமுறை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் எனவும் பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

போலியான ஆவணங்களை பயன்படுத்தி நிலம் தொடர்பான சொத்துகள் பத்திரப்பதிவு செய்யப்படுவதை தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

What do you think?

CAA: கொல்கத்தாவை அதிரவைத்த GoBack Amit Shah

மத்தியபிரதேசத்தில் இரண்டு ரயில்கள் மோதல்; 3 பேர் உயிரிழப்பு?