மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இளைஞர்கள் அரை நிர்வாணத்துடன் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்..!!
மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து இந்திய இளைஞர்கள் பெருமன்றம் சார்பில் மயிலாடுதுறையில் அரை நிர்வாணத்துடன் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
மணிப்பூரில் 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நீடித்து வருகிறது. அதில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக முக்கிய குற்றவாளிகளை அம்மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் அரைநிர்வாண போராட்டமானது நடைபெற்றது.
பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மாநிலம் மற்றும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதனை தொடர்ந்து அரை நிர்வாணத்துடன் அஞ்சல் அட்டை மற்றும் இ-மெயில் அனுப்பும் போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் அரை நிர்வாணமாக பங்கேற்று, மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் இருந்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினர். .
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..