நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம்..! கலி பூங்குன்றன் பேட்டி..!
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி இரு சக்கர வாகன பரப்புரையை திராவிடர் கழக துணைத்தலைவர் கலி பூங்குன்றன் தொடங்கி வைத்தார்.
நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் சென்னை பெரியார் திடலில் 20க்கும் மேற்பட்ட திராவிடர் கழகத்தினர் இரு சக்கர வாகன பரப்புரையை தொடங்கினர்.
திராவிடர் கழக தலைவர் கலி பூங்குன்றன் இரு சக்கர வாகம பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர், சமூக நீதிக்காக திராவிட இயக்கம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது. மண்டல் குழு பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என திராவிடர் கழகம் பல இடங்களில் மாநாடு நடத்தி வெற்றி கண்டது.
தற்போது நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலிருந்து திராவிடர் கழகத்தினர் இன்று முதல் சேலம் நோக்கி இருசக்கர வாகன பரப்புரையில் ஈடட்டவுள்ளனர்.
சென்னையில் இன்று தொடங்கிய இருசக்கர் வாகன பரப்புரை ஜுலை 15ம் தேதி சென்றடையும் என்றும் வழி நெடுக பொதுமக்களிடம் சென்று நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டிற்காக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்காக இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளோம் என திராவிடர் கழக துணைத்தலைவர் கலி பூங்குன்றன் தெரிவித்தார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..