ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இன்று காலை இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ராக்கெட்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை புரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் 9 செயற்கை கோள்களை சுமந்து விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் 44.4 மீட்டர் உயரம், 4.8 மீட்டர் அகலம் கொண்டதாகவும் மற்றும் 321 டன் எடையும் கொண்டு உள்ளது. இந்த ராக்கெட் புவி செயற்கைக்கோளான ஓஷன்சாட்-03 மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை சுமந்து சென்றுள்ளது. இந்தியாவின் ஓஷன்ஷாட் செயற்கை கோல் 960 கிலோ ஆகும்.
மேலும் இந்த ராக்கெட், கடற்பரப்பு, கடற்பரப்பில் வெப்பநிலை மாறுபாடுகள், காற்றின் வேகம் போன்றவற்றை கண்காணிக்க அனுப்பப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈஸ்ரோவின் விஞ்ஞானிகள் பல ராக்கெட்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருவதால் பலரும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.