கென்யாவில் 42 பெண்களை கொலை செய்த சைகோ கில்லர்..! போலீசில் சிக்கியது எப்படி..? கொலையின் பின்னணி..?
கடந்த ஜூலை 11ம் தேதி, கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் உள்ள குப்பை கிடங்கு ஒன்றில், பிளாஸ்டிக் பைகளில் வெட்டப்பட்டும் சிதைக்கப்பட்டும் 9 உடல்கள் கண்டெக்கப்பட்டது. அந்த கோர சம்பவமானது நைரோபியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனையடுத்து, அந்த கொடூர கொலை சம்பவம் குறித்து அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சடலமாக மீட்கப்பட்ட பெண்ணிடம் இருந்து ஒரு செல்போன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதனை சோதனை செய்ததில் காலின்ஸ் ஜூமைசி கலுஷா என்ற 33 வயது நபர் ஒருவரிடம் இருந்து அதிகமான போன் கால் கடைசியாக வந்துள்ளது.. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ், அந்த நபரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக, கால் செய்துள்ளனர் ஆனால் அந்த நபர் காலை எடுக்கவில்லை இதனால் சந்தேகமடமைந்த போலீஸ் அந்த தனி நபரை தேடி சென்றுள்ளனர்.
அவர் கலிசியா மதுக்கடையில் இருப்பது தெரியவரவே, கடந்த திங்கள்கிழமை அதிகாலையில் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். அதனை தொடர்ந்து கொலைகள் குறித்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், குப்பை கிடங்கில் கிடந்த 9 பெண்களை கொடூரமாக கொன்றதை ஒப்பு கொண்டுள்ளார்.
அதனை தொடர்ந்து காவல்நிலையம் அழைத்து வந்து அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியானது,
அதில், கடந்த 2022ம் ஆண்டு முதல் தற்போது வரை கிட்டதட்ட 42 பெண்களை இவர் கொன்று புதைத்துள்ளதாகவும், அதில் தான் முதலாவது கொலை செய்தது தன்னுடைய மனைவியை தான் என தெரிவித்துள்ளார். ஆனால் எதற்காக இத்தனை பெண்களை கொலை செய்தார் என்ற காரணத்தை தெரிவிக்கவில்லை. எனவே போலீஸார் தற்போது அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுகுறித்து அந்நாட்டின் குற்றவியல் புலனாய்வு இயக்குநரகத்தின் தலைவர் முகமது அமீன் கூறுகையில், “இந்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தனது மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமாக உடல்களை சிதைத்து கொன்று புதைத்துள்ளார்.
மேலும், எங்களது விசாரணையில் கொலை செய்யப்பட்ட அனைத்து நபர்களும் ஒரே பாணியில் கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் இவர் ஒரு சீரியல் கில்லர் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். மேலும் கொலைக்கான காரணம் என்னவென்று விரைவில் வெளியாகும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..