மாநிலம் தழுவிய PUBG போட்டி; அதிர வைத்த மோசடி?

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற இருந்த மாநில அளவிலான பப்ஜி விளையாட்டுப் போட்டியில், மோசடி நடப்பதாக இருந்த புகாரை அடுத்து போட்டி தடை செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கல்லல் ஆகிய நகர்களில் இயங்கி வரும் அன்னை மொபைல்ஸ் நிறுவனம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அது எதிர்ப்பார்த்ததை விட கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, தற்போது அன்னை மொபைல்ஸ் கடைகளின் உரிமையாளர்கள் சிறை செல்லவும் காரணமாக அமைந்துள்ளது.

கல்லல் நகரில் உள்ள செள்ந்தர நாயகி உடனுறை சோமசுந்தரேஸ்வரர் கோயிலில் மாசித் தேர்த் திருவிழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழாவின் போது பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வருட திருவிழாவையொட்டி மாநிலம் தழுவிய பப்ஜி போட்டி நடத்தப்படும் என அன்னை மொபைல்ஸ் கடையினர் அறிவித்திருந்தினர்.

மார்ச் 5ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கும் இப்போட்டி காலை 9 மணி முதல் இரவு நடைபெறும் என்றும். ஒரு குழுவுக்கு 4 பேர் என பிரிக்கப்பட்டு 600 குழுக்களாக விளையாட வேண்டும் எனவும், மொத்தமாக 2500 பேர் பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் மூன்று இடங்கள் வரும் குழுக்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி, முதல் பரிசாக 1 லட்சம், 2-வது பரிசாக 50 ஆயிரம், 3-வது பரிசாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், இது பரிசு பொருளாகவோ அல்லது ரொக்கமாகவோ வழங்கப்படும் என அந்த கடை உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். தினமும் அதிகரித்து வரும் ஆன்லைன் வர்த்தகத்தின் பாதகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், சென்னைப் போன்ற பெருநகரங்களிலேயே பப்ஜியை 4 பேர் விளையாடினால் சர்வர் பிரச்சினை ஏற்படுகிறது. அப்படி இருக்கும்போது ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் எப்படி இந்த விளையாட்டை விளையாட முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் இந்த அறிவிப்பு மோசடியாக கூட இருக்கலாம் என்று போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், இளைஞர்களை அடிமைப்படுத்தி அவர்களின் உயிரை பறிக்கும் இதுபோன்ற மோசமான விளையாட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

What do you think?

சிம்பு – சேரன் புதிய கூட்டணி; மேஜிக் செய்யுமா?

துரித உணவு அபாயத்தை எச்சரிக்கும் யுனிசெஃப்…!