February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending அரசியல் இந்தியா தமிழ்நாடு

பொது பாதுகாப்பு சட்டத்துக்கு ஸ்டாலின் கண்டனம்

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் மீது போடப்பட்டிருக்கும் பொது பாதுகாப்பு சட்டத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், சிறைபடுத்தப்பட்டிருக்கும் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை அடக்குமுறை சட்டமான பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதற்கு திமுகவின் சார்பில் கடும் கண்டம் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல், எந்தக் கேள்வியும் கேட்காமல் முன்னாள் முதல்வர்களையும், முக்கிய அரசியல் தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பது, ஜனநாயகத்திற்கு கைவிலங்கும், கால்விலங்கும் போடும் கொடுமையான நிகழ்வு என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சர்வாதிகார மனப்பான்மையுடன், அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து, காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து, அங்குள்ள சட்டப்பேரவையைக் கூட மதிக்காமல், மக்களையும் மதிக்காமல், ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் மத்திய அரசு புதைத்திருப்பதாக அவர் சாடியுள்ளார்.

இந்தியாவின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கையுள்ள அரசியல் தலைவர்களையும், முன்னாள் முதல்வர்களையும் சிறையில் தொடர்ந்து அடைத்து வைத்திருப்பது, தனி மனித சுதந்திரத்திற்கும், மனித உரிமைகளுக்கும் எதிரானது என தெரிவித்துள்ள ஸ்டாலின், ஜனநாயகத்தின் மீதும், அரசியல் சட்டத்தின் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எள்ளி நகையாடுவது போல் மத்திய பாஜக அரசு தொடர்ந்து செயல்படுவது கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார். இது போன்ற மிருகத்தனமான சட்டங்கள், எந்த மாநிலத்திலும் பயன்படுத்தப்படலாம், எந்த அரசியல்வாதி மீதும் போடப்படலாம் என்பது நாட்டுக்கும், மத்திய, மாநில உறவுகளுக்கும் ஏற்றதல்ல என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – ரஜினி நேரில் ஆஜராக ஒரு நபர் ஆணையம் சம்மன்!

Digital Team

இந்துக்களை உஷார் படுத்தும் ஹெச்.ராஜாவின் சர்ச்சை டிவிட்கள்

Digital Team

21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இனி சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்கக்கூடாது …!

superadmin

ராஜஸ்தான் வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

Digital Team

சிங்காரச் செல்வன் சீமானின் ‘ஏய் பொண்டாட்டி’ – தம்பிகள் அதிர்ச்சி!

Digital Team

வருமானவரித்துறை அலுவலகத்தில் அர்ச்சனா கல்பாத்தி ஆஜர்

Digital Team
You cannot copy content of this page
Madhimugam