மிலாது நபி திருநாளுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உயிர்கள் அனைத்தின் மீதான அன்பும் நேசமும்
சகோதரத்துவமும்தான் இஸ்லாத்தின் அடிநாதம் என்பதை, தனது வாழ்நாள் முழுவதும் உணர்த்தியவர் நபிகள் நாயகம் அவர்கள். அமைதியின் பேருருவமும் கருணையின் வடிவமுமான முகம்மது நபியின் பிறப்பை மிலாது நபியாக உலகமெங்கும் உள்ள இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்த புனித நன்னாளில், சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வின் ஆசிர்வாதங்களைப் பெற்ற முகம்மது நபியின் போதனைகள் உங்கள் இதயத்தை ஒளிரச் செய்து, உங்களுக்கு மகிழ்ச்சி, சமாதானம், நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றி ஆகியவற்றை வழங்கட்டும் அனைவருக்கும் மிலாது நபி நல்வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.