புதுவையில் மார்ச் 31 வரை 144! – கொரோனா அப்டேட்

புதுச்சேரியில் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசால் இந்தியாவில் 5 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 298 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்கும் வகையில் புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

What do you think?

சமூக விரோதிகள் கைவரிசை காட்ட வாய்ப்பு! – ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை

கொரோனாவை எதிர்கொள்ள தமிழகத்திற்கு 987 கோடி நிதி!