கிரண்பேடி ஆளுநராக இருக்க தகுதியற்றவர்; நாராயணசாமி சாடல்!

கிரண்பேடி துணை நிலை ஆளுநராக இருக்க தகுதியற்றவர் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடுமையாக சாடியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு, புதுச்சேரியில் இன்று (புதன்) சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் நாராயணசாமி முன்மொழிந்தார். அப்போது துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆளுநராக இருப்பதற்கே தகுதியற்றவர் என அவர் கடுமையாக சாடினார். முதலமைச்சருக்கு அனுப்புவதற்கு முன்பே அரசின் கோப்புகளை சமூகவலைதளங்களில் வெளியிடுகிறார் என அவர் குற்றம்சாட்டினார்.

முதலமைச்சரின் பேச்சுக்கு அவையில் இருந்த பா.ஜ.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனையடுத்து பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேரும் அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதேபோல் எதிர்கட்சிகளான என்.ஆர். காங்கிரஸ், அதிமுக கட்சிகளும் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை புறக்கணித்தன. இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான தீர்மானம் புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேறியது.

What do you think?

வேலைவாய்ப்புகள் குறித்த வைகோவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்

“ஆம் ஆத்மி வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும்?” – ப.சிதம்பரத்திற்கு பிரணாப் முகர்ஜி மகள் கேள்வி