முதல்வர் முக ஸ்டாலின் புதுச்சேரியில் திமுக அவைத்தலைவர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பின் பேசிய முதல்வர், எனக்கு புதுச்சேரி மீது தனி பாசம் உள்ளது என்றும் புதுச்சேரிக்கு திராவிட மாடல் ஆட்சி தேவை என்றும் பேசியுள்ளார்.
முதல்வர் முக ஸ்டாலின் புதுச்சேரி மாநிலத்தின் திமுக அவைத்தலைவர் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார் பின்னர் அந்த விழாவில் பேசிய முதல்வர் புதுச்சேரியில் ஆளுநர் ஆட்டி படைக்கும் ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுவையில் மதவாத ஆட்சி அமைந்து விட கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் மேலும் நமக்குள் போட்டி இருக்கலாம் ஆனால் பொறாமை இருக்க கூடாது, புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கபட்ட ஆட்சி மக்களுக்காக நடக்கிறதா என்றும் விமர்சித்தார்.
மேலும் பேசிய முதல்வர், தற்போது திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கு தேவை என்றும் மீண்டும் புதுச்சேரியில் திமுக ஆட்சியமைக்கும், புதுச்சேரி மீது தனக்கு தனி அக்கரை இருக்குறது என்றும் தமிழ்நாட்டையும் புதுச்சேரியையும் யாரும் பிரித்து பார்க்க முடியாது என்று கூறினார். மேலும், புதுச்சேரி முதல்வர் நல்லவர் தான், ஆனால் வல்லவராகவும் இருக்க வேண்டும் என்றும் எந்தவிதத்திலும், எந்த சூழலிலும் மக்களோடு துணை நின்று பணியாற்றுவேன் என்றும் திருமண விழாவில் முதல்வர் பேசினார்.