புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கண்ணனூர் கிராமத்தில் உள்ள கண்ணனி கண்மாயில் மீன் பிடி திருவிழா கோலாகலம், நுற்றுக்கணக்கான பொதுமக்கள் கண்மாயில் ஒரே நேரத்தில் இறங்கி போட்டி போட்டுக்கொண்டு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கண்ணனூர் கிராமத்தில் உள்ள கண்ணனி கண்மாயில் மீன் பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பொதுவாக திருமயம் மற்றும் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர் வற்றும் விவசாய கண்மாய்களில் ஜாதி,மதம் பாராமல் அனைத்து மக்களும் கலந்து கொள்ளக்கூடிய மீன்பிடித் திருவிழா நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஊர் ஒற்றுமைக்காகவும் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு திருமயம் மற்றும் பொன்னமராவதி பகுதிகளில் தினசரி மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று கண்ணனூர் கிராமத்தில் உள்ள கண்ணனி கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கண்ணனி கண்மாயில் குவிந்தனர்.
பின்னர் ஊர் முக்கிய பிரமுகர்கள் வெள்ளை வீசி போட்டியை தொடங்கி வைத்த நிலையில் ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன்பிடிக்கத்தொடங்கினர். அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. அதனை மகிழ்ச்சியுடன் மக்கள் வீட்டிற்க்கு அள்ளிச் சென்றனர்.
SIDEBAR