புதுக்கோட்டை பெண்ணால் பரபரப்பான மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…!! மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவு..!!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் இளம் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பரபரப்பு காவல் துறையினர் அவர்களை மீட்டு அழைத்துச் சென்றனர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி குப்பக்குடியை சேர்ந்தவர் துர்கா இவரது தாய் இறந்துவிட்டார். இவரது தந்தை குடும்ப பொறுப்பற்றுவதாக இருந்து வருகிறார். இந்த நிலையில் துர்கா தனது சகோதரர் சகோதரிகளுடன் பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறார் பூ கட்டும் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவருடைய அத்தை உடைய ஆண் நண்பர் துர்காவை பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக துர்கா ஆலங்குடி அனைத்து மகளிர காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை..
இந்த நிலையில் தனது அத்தை வேறு ஒருவருக்கு துர்காவை திருமணம் செய்து செய்து வைத்ததாக கூறப்படுகிறது தொடர்ந்து அத்தையின் ஆண் நண்பர் பிரபுதேவா துர்காவிற்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் மணமுடைந்த துர்கா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்தார்.
புகார் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி உத்தரவிட்டூம் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது..
இதனால் அதிர்ச்சி அடைந்த துர்கா தனது 4 சகோதர சகோதரிகளுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததோடு பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி அலுவலகத்திற்குள் தற்கொலைக்கு முயற்ச்சித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர்களை புதுக்கோட்டை திருகோகரணம் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று தற்போது விசாரணை செய்து வருகின்றனர்..
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைவு வாயில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தும் பாதுகாப்பையும் மீறி இளம்பெண் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..