பிளாஸ்டிக் பயன் படுத்தினால் தண்டனையா..? உச்சநீதிமன்றம் வெளியீட்டுள்ள அதிரடி முடிவு..!!
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
தமிழ்நாடு அரசை பொருத்தவரையில் பேப்பர் கப், மற்றும் மெழுகு உள்ளிட்ட உடல் நலத்திற்கு கெடு விளைவிக்கும் பொருட்கள் கொண்டு தடை தயாரிக்கப்படும்..
பிளாஸ்டிக் பைகள் மற்றும் ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ரவீந்திரப்பட் மற்றும் அரவிந்தகுமார் அமர்வில் விசாரணை நடத்தப்பட்டு, தீர்ப்புக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி அளித்துள்ள தீர்ப்பில். பேப்பர் கப்புகளுக்கும் மற்றும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த அரசாணை செல்லும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது சரி என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பேப்பர் கப்புகள் மீதான தடை தொடர்பான உத்தரவை ஒன்றிய அரசின் நடைமுறைகள் அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..