திருப்பதி அன்னதானத்தில் பூரான்..!! தேவஸ்தானம் விளக்கம்..!! அதிர்ச்சியில் பக்தர்கள்..!!
திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது என திருமலை தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் எண்ணெய் கலந்த நெய் உபயோகப் படுதப்பட்டிருப்பதாக ஒரு சர்ச்சை வெளியாகி பலரையும் அதிர்ச்குள்ளாக்கியது. இந்த சம்பவம் ஓய்வதற்குள் அடுத்த ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது..
புனித திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டுவில் உபயோகப்படுத்தபடும் நெய்யில்., மாட்டு கொழுப்பு., பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்த நெய்யை உபயோகபடுத்தி இருப்பதாக சர்ச்சைகள் கிளம்பி பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..
அதன் பின்னர் குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாடு வாரியத்தின் கீழ் இயங்கும் ஆய்வகதிற்கு லட்டுவின் மாதிரி சாம்பிள்கள் கொண்டு செல்லப்பட்டு உறுதி செய்யப்பட்டது., ஆய்வின் முடிவில் மாட்டு கொழுப்பு., பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்திருப்பது உறுதியானது.., மறுபக்கம் விலங்கு கொழுப்புகள் பயன்படுத்தியதால்., தோஷங்கள் நீக்க பரிகார பூஜைகள் செய்யப்பட்டது..
அதன் பின்னர் கடந்த செப்டம்பர் 24ம் தேதி தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கொல்லகூடேம் பகுதியைச் சேர்ந்த பத்மாவதி என்ற வாங்கி சென்ற லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது..
இந்நிலையில் மற்றொரு சர்ச்சைகள் கிளம்பியுள்ளது., அதாவது நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு அன்னதானம் சாப்பிட சென்றுள்ளார்.. அப்போது அவர் சாப்பிட்ட உணவில் பூரான் இருந்ததாகவும் அதை போட்டிவாக எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்..
அதற்கு தேவஸ்தானம் விளக்கம் தெரிவித்துள்ளது.., அதாவது பக்தர் ஒருவர் கூறிய குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. திட்டமிட்டு தேவஸ்தானத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் திட்டமிட்ட செயல் எனவும் திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தற்போது திருப்பதி லட்டு தொடங்கி அன்னதானம் வரையில் ஒவ்வொன்றாக சர்ச்சைகள் கிளம்பி வருவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..