புரட்டாசி முதல் நாள் சிறப்பு..!! பெருமாள் அருள் கிடைக்க இதை செய்ய மறக்காதீங்க..!!
ஆடி மாதம் என்றால் அம்மனுக்கு., ஆவணி என்றால் கிருஷ்ணர் மற்றும் விநாயகருக்கும், கார்த்திகை மாதம் ஐயப்பன் சுவாமிக்கும் உகுந்த மாதமாக சொல்லப்படுவதை போல புரட்டாசி என்றாலே பலருக்கும் தெரிந்திருக்கும்.. அது வெங்கடேச பெருமாளுக்கு மிகவும் உகுந்த நாள் என்று.. ஆனால் இந்த மாதத்தில் பெருமாளுக்கு மட்டுமின்றி சிவபெருமானுக்கும்., அம்பாளுக்கும் மிகவும் உகுந்த மாதமாக புரட்டாசி மாதம் இருக்கிறது..
புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப்பற்களில் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எனவே புரட்டாசி மாதத்தில் நாம் எந்த அளவுக்கு வழிபாடுகள் செய்கிறோமோ அந்த அளவுக்கு எம பயத்தில் இருந்து விடுபடலாம். துன்பங்களில் இருந்து மீண்டு வர முடியும். தமிழ் மாதங்கள் 12-ல் 6-வது மாதமாக புரட்டாசி மாதம் வருகிறது. புரட்டாசி மாதத் துக்கு பல்வேறு மகிமைகளும், சிறப்புகளும் உண்டு.
புரட்டாசி மாதத்தை தெய்வீக மாதம் என சொல்லுவார்கள். புரட்டாசி மாதம் என்பது காக்கும் கடவுளான மகா விஷ்ணுவிற்கு ஏற்ற மாதம் நவகிரகங்களில் புதனுக்கு ஏற்ற மாதமாக கருதப்படுகிறது.
ஏகாதசி திதி தினத்தன்று பகலில் தூங்காமல் மகா விஷ்ணு மந்திரத்தை சொல்லி வழிபட்டால் சிறந்தது. அதேபோல் திருவோணம் நட்சத்திரதிற்க்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
திருவோண நட்சத்திரம் என்பது திருப்பதியில் பெருமாள் தன்னை வெளிப்படுத்தி கொண்ட தினமாக கருதப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த திருவோண நட்சத்திர தினத்தன்று அவரை வழிபட்டால் மகா விஷ்ணுவின் கருணை பார்வை கிடைக்கும்.
கோவில்களுக்கு சென்று வழிபட முடியாத பக்தர்கள் வீட்டில் இருந்தே பெருமாள் படத்திற்கு பூக்களால் அலங்கரித்து, சர்க்கரை பொங்கல் போன்ற நைவேத்தியங்கள் படைத்து அவரை வழிபாடு செய்யலாம்.
மறுநாள் காலை திருவோண நட்சத்திரம், ஏகாதசி, புரட்டாசி முதல் நாள் தொடக்கம் ஆகிய மூன்றும் சங்கமித்து இருக்கின்றன. எனவே இன்று காலையில் இந்த சிறப்பு வழிபாடுகளை வைத்துக்கொள்வது மிக மிக நல்லது.
புதனின் அதிதேவதை மகாவிஷ்ணு ஆவார். புதனின் வீடு கன்னி ராசியாகும். இது பெருமாளின் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரிய பகவான் இருப்பதால் புரட்டாசி மாதம் முழுவதுமே மிகவும் சிறப்பான மாதம்.
நீங்க வேணும்னா கேட்கலாம் எனக்கு ஏன் இந்த வித்தையெல்லாம் தெரியணும் நான் என்ன மந்திரவாதியா..? என. வித்தை என்பது மந்திரத்தில் மட்டுமல்ல நாம் பேசும் பேச்சிலும் கூட ஒருவரை நாம் சொல்லிற்கு கட்டுபட்டு நடந்தால் அதுவும் வித்தை என சொல்லுவார்கள் அதாவது ஒருவரை அன்பினால் கட்டி போடுவது என சொல்லுவதை போல..
இதை சொல்லாதிக்கம் என சொல்லுவார்கள் நாம் பிறருக்கு நல்லதே செய்தாலும் நல்லதை சொன்னாலும் கூட அவர்கள் அதை கேட்பதில்லை.. உங்கள் இல்லரத்திலோ அல்லது வேலைபார்க்கும் இடத்திலோ சொல்லதிக்கம் நிலைத்திருக்க புதன் பகவானை வழிபடலாம்..
ஒருவரை சொல்லுக்கு அடிமையாக்கு பவர்கள் மட்டுமல்ல.., கவிதை எழுதுபவர், எழுத்தாளர் என எல்லோரும் புதன் பகவானை வழிபடலாம் புதன் பகவானை ஏன் வழிபட வேண்டும் என்றால்.. வெங்கடேஷ பெருமாளை சனிக்கிழமை நாளில் வழிபடுவதால்.. சனி கிரகங்களால் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க நாம் புதன் பகவானை வழிபட வேண்டும்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..