புரட்டாசி பௌர்ணமி விரதம்…!! நினைத்தது நடக்க இந்த தெய்வத்தை வழிபட மறக்காதீங்க..!!
புரட்டாசி மாதம் என்றாலே மிகவும் விசேஷமான மாதம் என சொல்லலாம் அதிலும் இந்த மாதம் முழுவதும் பெருமாளுக்காக பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம்.. குறிப்பாக இந்த மாதத்தில் புரட்டாசி சனி., புரட்டாசி செவ்வாய், புரட்டாசி அமாவசை மட்டுமின்றி புரட்டாசி பௌர்ணமி மிகவும் விசேஷமான நாட்கள்.. அந்த வகையில் இன்று புரட்டாசி பௌர்ணமி இன்றைய நாளில் நாம் செய்ய வேண்டிய முக்கிய வழிபாடுகள் பற்றி இதில் விரிவாக படிக்கலாம்..
இன்று புரட்டாசி மாதத்தின் கடைசி நாள் மட்டுமின்றி புரட்டாசி மாதத்தில் வரும் இரண்டாவது பௌர்ணமியும் கூட இன்றைய நாளில் பெருமாளையும், குலதெய்வங்களையும் வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும்..
பொதுவாகவே பௌர்ணமி என்றாலே அன்றைய நாளானது அம்பிகை அம்மனுக்கு மிகவும் விசேஷமான நாள் என சொல்லலாம்.. அதிலும் இன்று புரட்டாசி பௌர்ணமி இன்றைய நாளானது கூடுதல் விஷேசமான நாளாக கருதப்படுகிறது. இன்று பிரம்மன், விஷ்ணு, இந்திரன் ஆகிய 3 பேரும் அம்பிகை அம்மனை போற்றித் துதித்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது..
இன்று காலை முதல் விரதம் இருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும், அம்பிகை அம்மனையும் தரிசனம் செய்ய வேண்டும். அப்படி வழிபட்டால் வாழ்வில் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.. அதேபோல் இன்றைய நாளில் குலதெய்வம் வழிபாடு மிக அவசியம்..
இன்று அம்பிகை அம்மனுக்கு மட்டுமின்றி குலதெய்வத்திற்கும் பூஜைகள் செய்து வழிபடலாம்.. முடிந்த அளவிற்கு குல தெய்வம் கோவிலுக்கு செல்வது நல்லது.. இதனால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கும்..
அதேபோல் இன்று சிவபெருமானை வழிபட்டு அவருக்கு வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைப்பது மட்டுமின்றி பூர்வ ஜென்ம பாவங்களும் விலகும் என்பது ஐதீக உண்மை..
இன்றைய நாளில் அம்பிகை அம்மன், குலதெய்வம் மற்றும் சிவபெருமானை வழிபடுவது இன்னும் சிறந்த பலன்களை கொடுக்கும்… அதேபோல் இன்றை நாளில் நாம் மனதார ஓர் விஷயத்தை நினைத்து விரதம் இருந்து வழிபட அது நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..