காலையில் சுட்ட இட்லி மீந்துபோனால் இப்படி செய்ங்க..!
உங்க வீட்ல காலையில் செய்யும் இட்லியானது மீந்துபோய்விட்டால் அதை அப்படியே தூக்கி எறியாமல் அந்த இட்லியை வைத்து இரவு உணவாக செய்து கொடுங்க அப்படியே அசந்து போய்டுவாங்க, இது காலைல செய்த இட்லினு தெரியாமலே வீட்டில் இருப்பவர்கள் டேஸ்டாக இருக்குனு சாப்பிடுவாங்க.
தேவையான பொருட்கள்:
இட்லி
எண்ணெய் 4 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
வெங்காயம் 2
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
செய்முறை:
முதலில் இட்லியை சிறு சிறு துண்டுகளாக கைகளால் பிரித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு சேர்த்து பொரித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்ததாக தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
பின் பிரித்து வைத்துள்ள இட்லியை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
வாயில் போட்டு உப்பு டேஸ்ட் பார்த்து தேவைப்பட்டால் சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.
இதற்கு தொட்டு சாப்பிட எதுவும் தேவையில்லை இதை அப்படியே சாப்பிடலாம்.
நான் சொன்ன மாதிரி மீந்துபோன இட்லி வைத்து இப்படி செய்து கொடுங்க அப்பறம் பாருங்க உங்களுக்கு வரும் அதிகமான பாராட்டுகள்.