சுவையான ‘மஸ்ரூம் ஹெர்ப் ரைஸ்’ இன்னிக்கு செய்யலாமா..!
மஸ்ரூம் – 800 கிராம்
பாஸ்மதி அரிசி – 1 1/2 கப்
வெண்ணெய் – 1/4 கப்
பூண்டு – 2 மேசைக்கரண்டி
வெங்காயம் – 2
உப்பு – தேவையானவை
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சில்லி பிளேக்ஸ் – 2 தேக்கரண்டி
இட்டாலியன் சீசனிங் – 3 தேக்கரண்டி
வெஜிடபிள் ப்ராத் – 3 கப்
கொத்தமல்லி இலை
ஒரு வாணலை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி மஸ்ரூம்,உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.
மற்றொரு காடாயில் வெண்ணெய் சேர்த்து பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் மீதமுள்ள மஸ்ரூம் போட்டு வதக்கவும்.
அத்துடன் உப்பு,மிளகுத்தூள்,சில்லி பிளேக்ஸ்,இட்டாலியன் சீசனிங் சேர்த்து கிளறவும்.
பின் ஊறவைத்த அரிசி சேர்த்து வெஜிடபிள் ப்ராத் சேர்த்து 15 நிமிடம் வேக விடவும்
பின் இறக்கியதும் சாதத்துடன் முன்பு வதக்கி வைத்துள்ள மஸ்ரூம் மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறி விடவும்.
அவ்வளவுதான் சுவையான மஸ்ரூம் ஹெர்ப் ரைஸ் தயார்.
