சத்தான காய்கறி மற்றும் கீரை ஆம்லெட்..!
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 1
கேரட் – 1
வெங்காயம் – 1
தண்டுக்கீரை – ஒரு கைப்பிடி
கார்ன் ஃப்ளோர் (அ) மைதா – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – அரை ஸ்பூன்
சாட் மசாலா – கால் ஸ்பூன்
முட்டை – 3
எண்ணெய் – தேவையானது
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் சீவி துருவிக் கொள்ள வேண்டும். கேரட் ஒன்றை தோல் சீவி சுத்தம் செய்து அதனையும் துருவிக் கொள்ள வேண்டும்.
தண்டுக்கீரையை சுத்தம் செய்து அதையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
நறுக்கிய அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும்.
முட்டை கலவையில் மைதா அல்லது கார்ன் ஃப்ளோர் ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு, மிளகுத்தூள் அரை ஸ்பூன், சாட் மசாலா கால் ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடானதும் லேசாக எண்ணெய் தடவி பின் முட்டை கலவையை இதில் வட்டமாக ஊற்றி, சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் மறுபக்கம் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் காய்கறிகள் மற்றும் கீரைகள் நிறைந்துள்ள சத்தான ஆம்லெட் தயார்.
இதை ஈவினிங் மற்றும் இரவு உணவாக சாப்பிடலாம்.
இந்த ஆம்லெட்டுடன் பன்னீர், காளான், மற்ற காய்கறிகள் என அதை வேண்டுமானாலும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம் ரொம்ப சுவையாகவும் வயிறு நிரம்பியும் காணப்படும்.